Local

கள்ளக்காதலினால் பெற்றெடுத்த இரட்டைக் குழந்தைகளைக் கொலைசெய்த கொடூர தாய்!

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் கூலி வீட்டில் இருந்த தாய் ஒருவர் தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளைக் கொலைசெய்துவிட்டு பையொன்றில் போட்டுவிட்டு வைத்தியசாலையில் சென்று சிகிச்சை பெற்றபோது பொலிஸார் அவரைக் கைதுசெய்துள்ளனர்.

30 வயதுடைய பெண்ணே கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் அதிக இரத்தப்போக்குக் காரணமாக சிகிச்சை பெற ஹோமாகம வைத்தியசாலை சென்றுள்ளார்.

அங்கு இரத்தப் போக்குக்கான காரணத்தைக் கேட்டபோது வீட்டில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

கள்ளக் காதலினால் குறித்த குழந்தைகள் பிறந்தன எனவும், தனக்கு 5 வயதான மற்றுமொரு பிள்ளை இருக்கின்றார் எனவும் குறித்த பெண் வைத்தியசாலையில் நின்ற பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் பொலிஸார் வீட்டைப் பரிசோதனை செய்த சந்தர்ப்பத்தில் பை ஒன்றில் போடப்பட்டிருந்த இரு குழந்தைகளின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading