Local

ஐ.தே.கவின் இரு அமைச்சர்கள் மஹிந்த பக்கம் தாவல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டு அரசில் பிரதி அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஆனந்த அளுத்கமகே, புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேயின் நெருங்கிய உறவினரான இவர், ஊடகங்களிடம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் ஐ.தே.கவைச் சேர்ந்த பலர் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கூட்டு அரசின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த வசந்த சேனநாயக்கவும், மஹிந்தவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், அவருடன் இணைந்துகொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.

எனினும், ஐ.தே.கவைச் சேர்ந்தவர்கள் கட்சி தாவப் போவதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை என்று பிரதி அமைச்சர் அஜித் பெரேரா மறுத்துள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் மஹிந்த – மைத்திரி கூட்டு அரசில் இணையவுள்ளார் என்று ஊகங்கள் பரவியுள்ளன.

எனினும், அந்தச் செய்திகளில் உண்மையில்லை என்று ஐ.தே.க. அமைச்சர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading