Local

சஹ்ரானின் நெருங்கிய 2 சகாக்கள் ஹொரவப்பொத்தானையில் கைது!

உயிர்த்த ஞாயிறன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தி மரணித்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதி சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில், ஹொரவப்பொத்தானையில் இன்று வெள்ளிக்கிழமை இருவரை விசேட அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுடன் இவர்களுக்குள்ள தொடர்புகள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, மாபோளை – வத்தளை பிரதேசத்தில் நேற்று முகம்மட் றிஸ்வான் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தற்கொலைக் குண்டுதாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் எனும் சந்தேகத்தில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading