Lead NewsLocalNorth

விடுதலைப்புலிகளின் சீருடையுடன் முள்ளிவாய்க்காலில் எலும்புக்கூடு!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நாளை சனிக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 381ஆவது இராணுவ முகாமுக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவ சங்கத்தினரின் காணியில் புதிய கட்டடம் ஒன்றின் நிர்மாணத்துக்காகக் குழி தோண்டப்பட்டபோதே குறித்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலும்புக்கூட்டுடன் விடுதலைப்புலிகளின் சயனைட் குப்பி ஒன்றும், இரண்டு கைக்குண்டுகளும் காணப்படுகின்றன.

இந்த எலும்புக்கூடு மற்றும் கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

நாளை சனிக்கிழமை மேலதிக விசாரணைகளின் பின்னர் எலும்புக்கூடும், கைக்குண்டும் அவ்விடத்தில் இருந்து மீட்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading