Uber ஓட்டிய இளைஞர் இன்று Graduation Gown அணிந்து Degree பெற்றார்!
“பையில் பொருட்களை ஏற்றிக்கொண்டு Uber ஓட்டிய நான், இன்று Graduation Gown அணிந்து Degree பெறும் நிலைக்கு வந்திருக்கிறேன்…”
தனது வாழ்க்கைப் பயணத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் Chamod Bimsara.
புலமைப்பரிசில் பரீட்சையில் 88 மதிப்பெண்களும், O/L பரீட்சையில் C4 மற்றும் S4 பெறுபேறுகளும் பெற்றிருந்த நிலையில், A/L Commerce படிக்க முடியாது என சிலர் கூறிய போதிலும், தனது இலக்கில் உறுதியாக இருந்து Commerce பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.
A/L பரீட்சையில் AAB பெறுபேறுடன் District Rank 247 பெற்ற அவர், Sabaragamuwa University-ல் வாய்ப்பு கிடைத்திருந்தபோதிலும், Interest-Free Student Loan மூலம் SLIIT-ஐத் தேர்ந்தெடுத்து கொழும்புக்கு வந்து தனது கல்வியைத் தொடர்ந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு கையில் எதுவுமின்றி கொழும்புக்கு வந்த அவர், 2023ஆம் ஆண்டு Bike ஒன்றை வாங்கி Uber ஓட்டத் தொடங்கியுள்ளார். குடும்பத்திற்கு சுமையாக இருக்காமல் தனது வாழ்க்கைச் செலவுகளை தானே சமாளிக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்துள்ளது.
Uber ஓட்டிக்கொண்டே சிறிய தொழில் ஒன்றையும் ஆரம்பித்ததுடன், பின்னர் மற்றொரு சிறிய வாகனத்தையும் வாங்கியுள்ளார். அதே Bike மூலமாக தனது Career-க்கான நல்ல வேலை வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
இன்று அந்த நாட்களைத் திரும்பிப் பார்க்கும் Chamod Bimsara, “நான் தளர்ந்து பின்வாங்கியிருந்தால் இன்று இந்தக் கதையை சொல்லியிருக்க முடியாது” என்கிறார்.
இளம் தலைமுறையினருக்கு அவர் கூறும் செய்தி:
“உன்னை நம்பி முடிவு எடுக்க யாரும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், உனக்காக நீ இருக்கிறாய். அந்த நம்பிக்கை இருந்தால், இன்று Impossible என்று தோன்றும் விஷயங்கள் நாளை Possible ஆகலாம்.”
தனது வெற்றிப் பயணத்தில் துணைநின்ற குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தன்னை நம்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், குறிப்பாக தனது தாயின் மகிழ்ச்சியே தனக்கு போதும் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
Bike-ல் Bags-ஐ சுமந்த நாட்களிலிருந்து, இன்று Graduation
Gown அணியும் நாள் வரை… 🎓❤️
தன்னம்பிக்கையுடன் முன்னேறிய Chamod Bimsaraவின் இந்தப் பயணம், இன்னொருவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தட்டும்.

You must be logged in to post a comment.