Lead NewsLocal

வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள்! – ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் ரணில் கோரிக்கை

“இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒருவார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான வரைவை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிக்கின்றது. எனவே, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள்.”

– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஜனநாயக தேசிய முன்னணிக்கான வரைவை உடனடியாக நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை ஏற்படுத்தித் தாருங்கள். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ அல்லது ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுவதற்கு முன்னர் குறைந்த பட்சம் கூட்டணிக்கான யாப்பு எனக்குக் கிடைக்கப்பெற வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading