Local

கொழும்பில் களமிறங்க சஜித்துக்கு கதவடைப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் பதவியைத் தருமாறு அமைச்சரும் ஐ.தே.க. பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கையைப் பிரதமரும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார் என்று கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகிவரும் அமைச்சர் சஜித் பிரேமதாச – அதற்கு முதல் தனது தந்தையாரின் தொகுதியில் இருந்து களமிறங்க ஆவல்கொண்டே இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

ஆனாலும், இது கட்சிக்குள் தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கலாம் என்பதால் நிராகரித்துள்ள ரணில், அம்பாந்தோட்டையில் இருந்தே பணிகளைச் செய்யுமாறு சஜித்தைக் கேட்டுள்ளார் எனச் சொல்லப்படுகின்றது.

கொழும்பு மாவட்டத்தின் முக்கிய புள்ளியான அமைச்சர் ரவி கருணாநாயக்க சஜித்துடன் மோத ஆரம்பித்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படும் அதேசமயம், பிரதமர் ரணிலும் கொழும்பு மாவட்டத்துக்குள் புதிய அமைப்பாளர்களை நியமிக்க விரும்பவில்லை என அறியமுடிந்தது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading