World

ஒசாமா பின்லேடனின் மகனையும் குறிவைக்கிறது அமெரிக்கா!

ஒசாமா பின்லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

அல்-கய்தா அமைப்பின் முக்கியத் தலைவராக ஹம்சா உருவாகி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தனது தந்தை கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளைப் பழி வாங்க வேண்டுமென, சமீப ஆண்டுகளில் ஹம்சா காணொளி மற்றும் ஒலி வடிவச் செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

சுமார் 30 வயதாகும் ஹம்சா பின் லேடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவால் சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார்.

அவர் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லைப் பிரதேசத்தில் இருக்கிறார் எனக் கருதுகிறோம். அவர் இரானுக்குள் செல்லலாம். தெற்கு மத்திய ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர் இருக்கலாம், ” என ஹம்ஸாவின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading