LocalNorth

எலும்புக்கூடுகளையும் தேடவேண்டிய சூழ்நிலை! – காணாமல்போனோரின் உறவுகள் விசனம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி போராட்டங்களை முன்னெடுத்த எமக்கு, தற்போது மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளைத் தேடவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நேற்று மன்னாரில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் ஒருவரே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். தற்போது வரை எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 6 மனித எச்சங்கள் பரிசோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் 5 எச்சங்களின் அறிக்கை மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூறுகின்றனர்.

இவ்வாறிருக்க மற்றைய மனித எச்சத்துக்கு என்ன நடந்தது?” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading