Local

‘உத்தர தேவி’ ரயில் சேவையை இன்று ஆரம்பித்துவைத்தனர் மும்மூர்த்திகள்

கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையிலான உத்தர தேவி ரயில் சேவை இன்று ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் ஆரம்பமாகியுள்ளது.

உத்தர தேவி இன்று காலை 06.00 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டது.

அதன் சேவையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்துள்ளனர்.

724 பயணிகள் ஒரே தடவையில் பயணிக்கும் வசதி கொண்ட இந்தத் ரயிலில் முதலாம் வகுப்புப் பெட்டியும் இரண்டாம் வகுப்புப் பெட்டியும் குளிரூட்டப்பட்டவை.

இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ரயில் வடக்கு, தெற்கு நல்லிணக்கத்தை குறிக்கும் வகையில் சேவையில் ஈடுபடுகின்றது என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த ரயிலின் இன்றைய முதலாவது சேவையில் யாழ்ப்பாணம் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான புத்தகப் பைகள், அப்பியாசப் புத்தகங்கள் உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading