Local

ஈஸ்டர் குண்டுவெடிப்பு – சிறுவர்களுக்கு உளவியல் பயிற்சி

பயங்கரவாதத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ள சிறார்களின் உளநலம் குறித்து ஆராய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்காகி, பெற்றோர், உறவினர்கள், சகோதரர்கள் மற்றும் நண்பர்களை இழந்து, உள அளவில் பாதிக்கப்பட்டுள்ள சிறார்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த குண்டுத் தாக்குதலில் பெருமளவான சிறார்கள் உயிரிழந்திருந்ததுடன், பெருமளவான சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டுள்ள சிறார்களை அடையாளம் கண்டு, அவர்களை மனோநிலையை மாற்றுவதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 6ஆம் தேதி வரை மூடப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் திட்டங்களும் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading