Local

விக்கியின் அதிசொகுசு சவாரிக்கு மத்திய அரசு வைத்தது வேட்டு!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனுக்கு 60 ஆயிரம் டொலர் பெறுமதியான வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே – மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடக்குமாகாணசபையின் ஆயுட்காலம் உட்பட மேலும் சில காரணங்களைக் கருத்திற்கொண்டே யோசனை நிராகரிக்கப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.
“ பிரமுகர்களுக்கான சலுகை அடிப்படையிலான அனுமதிப் பத்திரங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஒருவருக்கு மாத்திரம் அதனை வழங்க முடியாது” என அமைச்சரவை இணை பேச்சாளர் தெரிவித்தார்.


கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
அதேவேளை, அமைச்சரவைப் பத்திரம் நிராகரிக்கப்பட்டமை தனக்கு கவலையளிக்கவில்லை என்று வடக்குமுதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading