LocalNorth

கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியது வடக்கு சபை! – விக்கியைப் போட்டுத் தாக்குகின்றார் விஜயகலா

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான வடக்கு மாகாண சபை கடந்த 5 ஆண்டுகளாக இருந்தும் பாடசாலைகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாண சபைக்கு நிதி ஒதுக்கப்பட்ட போதிலும் சரியான முறையில் கட்டடங்கள் அமைக்கப்படவில்லை, மைதானங்கள் புனரமைக்கப்படவில்லை, மாணவர்களின் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

நிதிகள் மீண்டும் திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டன. வடக்கில் இருந்த உறுப்பினர்கள் அதனை சரியான முறையில் கையாளவில்லை” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading