LocalNorth

வடக்கில் 231 பொலிஸாரின் இடமாற்றம் இரத்து!

வடக்கில் பணியாற்றும் 231 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தில், இரண்டு வருடங்கள் பணியாற்றி பூர்த்தி செய்த உத்தியோகத்தர்களுக்கே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், தாங்கள் வடக்கில் பணிபுரியவே விரும்புவதாக, இடமாற்றம் பெற்ற உத்தியோகத்தர்கள் மேன்முறையீடு செய்திருந்தனர்.

முதலில் 135 பேரும் இரண்டாவது தடவையாக 40 பேரும் இடமாற்றத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தனர். இதுதவிர மேலும் 56 உத்தியோகத்தர்கள் வடக்கில் பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.

அதன்படி தற்போது 231 உத்தியோகத்தர்களின் இடமாற்றம் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுப்படி இரத்துச்செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading