Lead NewsLocal

நிலைமையை அவதானிக்கிறோம்! விரைவில் முடிவை அறிவிப்போம்!! – சம்பந்தன் தெரிவிப்பு

“நாட்டில் நேற்றுத் திடீரென ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கூர்ந்து அவதானிக்கின்றோம். இது தொடர்பில் எமது முடிவை விரைவில் அறிவிப்போம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் ‘புதுசுடர்’ இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

கூட்டு அரசிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறியமை தொடர்பிலும், நாட்டின் பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“நடைபெறும் விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கின்றோம். விரைவில் எமது முடிவை அறிவிப்போம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading