Lead NewsLocal

மஹிந்தவை பிரதமராக ஏற்கமாட்டோம்! – மைத்திரியிடம் வெளிநாட்டுத் தூதுவர்கள் நேரில் இடித்துரைப்பு

“புதிய பிரதமர் மஹிந்தவையையும் ஜனாதிபதி மைத்திரியையும் ஓரங்கட்டவேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்காக நாம் அனைவரும் அணிதிரளவேண்டும். மஹிந்தவை பிரதமராக ஏற்கப்போவதில்லை என ஜனாதிபதியை நேற்றுச் சந்தித்த வெளிநாட்டுத் தூதுவர்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். புதிய அமைச்சரவையையும் அவர்கள் நிராகரித்துவிட்டனர்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் கொழும்பில் இன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading