World

Whats App பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் வழங்கியுள்ள நற்செய்தி

இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்றே, வாட்ஸ்அப்பிலும் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸைப் பகிரும் புதிய வசதியை மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

இதன்படி உங்கள் தொடர்புகளில் உள்ளவர்களை வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பட்டியலுக்கும் ஒரு பெயர் மற்றும் இமோஜியை (Emoji) வைத்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கமான நண்பர்களுக்கென தனியாக பட்டியல்

அத்துடன் நெருக்கமான நண்பர்களுக்கென தனியாக ஒரு பட்டியலை உருவாக்கி, குறிப்பிட்ட ஸ்டேட்டஸ்களை அவர்களுக்கு மட்டும் தெரியும்படி வைக்கலாம்.

வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு மெட்டா நிறுவனம் வழங்கியுள்ள நற்செய்தி | Good News For Whatsapp Users

மேலும் ஒவ்வொரு முறையும் ஸ்டேட்டஸ் வைக்கும்போதும் செட்டிங்ஸ் மாற்றத் தேவையில்லை. ஒருமுறை பட்டியலைத் தயார் செய்துவிட்டால், எளிதாகப் பகிர முடியும்.

தற்போது இந்த வசதி WhatsApp Beta for Android version 2.26.5.11 பதிப்பில் சோதனை செய்யப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading