Local

Whatsapp-ன் சில மணிநேர முடக்கம் ஒரே நாளில் 7கோடி பயனர்களை பெற்ற Telegram!

ஒரே நாளில் மற்ற தளங்களை அணுகுவதைக் காட்டிலும் சுமார் 70 மில்லியன் புது பயனர்கள் டெலிகிராம் செயலிக்கு கிடைத்துள்ளனர்.

பேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் திங்கட்கிழமை இரவு திடீரென முடங்கின. உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த செயலிகள் திடீரென முடங்கியதால், என்னசெய்வதென தெரியாமல் பயனர்கள் திகைத்தனர்.

இன்டர்நெட் பிரச்சனை என முதலில் நினைத்த பயனர்கள், சில மணி நேரங்களுக்குப் பின்னரே வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் முடங்கியதை அறிந்து கொண்டனர். யூசர்கள் எதிர்கொண்ட இந்த திடீர் பிரச்சனைக்கு விளக்கம் அளித்த பேஸ்புக் நிறுவனம், தொழில்நுட்ப பிரச்சனையால் செயலிகள் முடங்கியிருப்பதாக தெரிவித்தது.

சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் ஆப்ஸ்களின் செயல்பாடு இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால், ஒரே இரவில் மார்க் ஜூக்கர்பெர்க்கிற்கு சுமார் 7 பில்லியன் டொலர் வரை இழப்புகளை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், வாட்ஸ்அப் செயலியின் சில மணிநேர முடக்கம், டெலிகிராம் செயலியின் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. வாட்ஸ்அப் முடக்கத்தை அனுபவித்த பயனர்கள், கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் பயனர்களாக மாறியுள்ளனர்.

இதுவரை 70 மில்லியன் புது பயனர்கள் கிடைத்திருப்பதாக டெலிகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டெலிகிராம் ஆப் நிறுவனர் பாவெல் துரோவ் பேசும்போது, கடந்த 24 மணி நேரத்தில் டெலிகிராம் செயலியின் வளர்ச்சி விகிதம் எதிர்பார்க்காத வகையில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் மற்ற தளங்களை அணுகுவதைக் காட்டிலும் சுமார் 70 மில்லியன் புது பயனர்கள் டெலிகிராமுக்கு கிடைத்துள்ளனர். அவர்களின் வருகையை தாங்கள் முழுமனதோடு வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் தொடர்ந்து பயணிப்பதால், டெலிகிராமுக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானமாக நினைப்பதாக தெரிவித்த பாவெல் துரோவ், இதே வகையில் தங்களின் பயணம் தொடர்ந்து இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரத்தில் டெலிகிராம் செயலியின் வேகம் குறைந்திருப்பதை நாங்கள் அறிவோம் என கூறிய அவர், அதற்கு முக்கிய காரணம் உலகம் முழுவதும் உள்ள பயனர்கள் அதிகளவில் செயலியை பயன்படுத்தியதால் இந்த வேகக்குறைவு என விளக்கம் கொடுத்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading