Local

கோதுமை மா 5.50 ரூபாவாலும் பாண் 2 ரூபாவாலும் அதிகரிப்பு!

கோதுமை மாவின் விலை இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 5 ரூபா 50 சதத்தால் பிறீமா நிறுவனம் அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.

எனினும், நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்காமல் இவ்வாறு விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ளமைக்குஎதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபை அதிகாரி அசேல பண்டார தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த ஜூலை மாதமும் நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபைக்கு அறிவிக்காமல் கோதுமை மாவின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர் நோக்கும் அசௌகரியங்களை தடுக்கும் நோக்கில் உடனடியாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

இந்த விலையேற்றத்தையடுத்து, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 2 ரூபாவால் அதிகரிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

ஏனைய வெதுப்பக பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading