World

உலகம் முழுவதும் நெருங்கிய உறவுகளால் கொல்லப்படும் பெண்கள்!

ஒவ்வொரு நாளும் சராசரியாக 137 பெண்கள் உலகம் முழுவதும் கொல்லப்படுகிறார்கள். அதுவும் நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது இணை மூலமாகவே கொல்லப்படுகிறார்கள் என ஐ.நாவின் போதை மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் ஒரு புதிய தரவை வெளியிட்டிருக்கிறது.

”வீடுகளில்தான் பெண்கள் பெரும்பாலும் கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களின் வீடே அவர்களுக்கான அபாயகரமான இடமாக விளங்குகிறது” என இந்த அலுவலகம் கூறுகிறது.

2017ஆம் ஆண்டு கொல்லப்பட்ட 87 ஆயிரம் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் கைகளாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

தரவுகளை கவனமாகப் பார்த்தால் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பெண்கள் அவர்ளின் நெருக்கமான இணையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 20 ஆயிரம் பெண்கள் அவர்களின் மற்ற உறவுகளால் கொல்லப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading