Sports

XZahirians அமைப்பின் ஏற்பாட்டில் Inter-Batch Futsal Tournament

மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒன்றியமான ‘XZahirians’  எனும் அமைப்பின் ஏற்பாட்டில் பழைய மாணவர்களுக்கு இடையிலான புட்சல் கால்பந்து போட்டி (Inter-Batch Futsal Tournament) எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21.10.2018) ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

‘XZahirians’  அமைப்பின் விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள மேற்படி புட்சல் கால்பந்து போட்டியின் அறிமுக நிகழ்வு கடந்த சனிக்கிழமை மாவனல்லை ஹயா வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது.
லீக் முறையில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடரில்  சுமார் 40 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் பிரிவில் 25 வயதிற்கு கீழ் உள்ள பழைய மாணவர் அணிகளும், இரண்டாம் பிரிவில் 26-35 வயதிற்குற்பட்ட பழைய மாணவர் அணிகளும், மூன்றாம் பிரிவில் 36-45 வயதிற்குற்பட்ட பழைய மாணவர் அணிகளும், நான்காம் பிரிவில் 45 வயதிற்கு மேல் உள்ள பழைய மாணவர் அணிகளும் கலந்து கொள்ளவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
(ராயிஸ் ஹஸன்)

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading