Local

அதிகாலை கொழும்பில் அதிரடி! ஒரு கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன் ‘ஹைப்ரட் சுத்தா’ கைது! – இரு கார்களும் சிக்கின

‘ஹைப்ரட் சுத்தா’ என அழைக்கப்படும் சமீர ரசாங்க குணசேகர ஹெரோய்னுடன் இன்று அதிகாலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

37 வயதான குறித்த சந்​தேகநபர், பாதுக்க – நெட்டிஒலுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவரிடமிருந்து 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும் இரண்டு கார்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு, சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோய்னின் பெறுமதி 13 மில்லியன் ரூபா (ஒரு கோடி 30 இலட்சம் ரூபா) பெறுமதி எனவும் தெரிவித்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் கையாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading