சகோதரியுடன் சண்டை! தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலைக்கு முயன்ற மாணவி ஆபத்தான நிலையில்!!
தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு யுவதியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
18 வயதான மாணவியே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டார். உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
குறித்த யுவதியின் உடலில் 80 வீதமான எரிகாயங்கள் காணப்படுகின்றன என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நவிண்டில் – கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறு தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்துள்ளனர். அதில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தப் பகுதியில் அடுத்தடுத்து தீயில் எரியும் சம்பவம் இடம்பெறுவது கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

