Lead NewsLocal

அங்கொட சந்தியில் பயங்கரம்! துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!

கொழும்பு – அவிசாவளை பழைய வீதியின் முல்லேரியா – அங்கொட சந்தியில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரி வீதி அருகே நின்றுகொண்டிருந்தவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவரின் சடலம் முல்லேரியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இராஜகிரிய, களபளுவாவ பகுதியைச் சேர்ந்த 33 வயதான தாரக இரோசன பெரேரா என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading