LocalNorth

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி மன்னாரில் அடையாள உண்ணாவிரதம்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, மன்னாரில் அடையாள உண்ணாவிரப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நடந்தது.

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை உடன் நிறைவேற்றக் கோரியும், அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரியும், பயங்கரவாத தடைச் சட்டத்தை உடன் நீக்க வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் மன்னார் மாவட்டப் பிரஜைகள் குழுவின் உறுப்பினர்கள், சர்வமதத் தலைவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், மன்னார் நகரசபைத் தலைவர் மற்றும் நகரசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் மிக நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல் கைதிகளின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading