LocalNorth

இந்தியாவுக்கான பயணத்துக்கு சிவாஜிக்கு அனுமதி மறுப்பு!

இந்தியாவில் நடைபெறவுள்ள பயிற்சி நெறிக்குச் செல்லும் குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு நுழைவிசைவு மறுக்கப்பட்டுள்ளது.

ஆசியா பவுண்டேசன் நிறுவனத்தால் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. மாகாண சபை உறுப்பினர்கள் இரண்டு கட்டமாக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய உறுப்பினர்கள் இந்தியாவின் ஹைதரபாத் நகருக்கு நாளை ஞாயிற்றுக்கிழமை புறப்படவுள்ளனர்.

இந்தக் குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. அவருக்கான நுழைவிசைவு இந்தியத் தூதரகத்தால் மறுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading