Local

இலங்கை – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகள் நாளை சந்திப்பு – 6 உடன்படிக்கைகளும் கைச்சாத்து!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேர்டேக்குமிடையில் நாளை (16) சந்திப்பு இடம்பெறவுள்ளது.

ஐந்து நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிலிப்பைன்ஸ் பயணித்தார்.

அந்நாட்டின் ஜனாதிபதியின் விசேட அழைப்பிற்கிணங்கவே இவ்விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் 6 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.

சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி, விவசாயம் என ஆறு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளன. இதற்கு அமைச்சரவையும் அனுமதியளித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் முதலாவது உத்தியோகப்பூர்வ வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading