Cinema

சிம்புவின் காதலி டயானா எரப்பா கன்னட தேசத்துப் பைங்கிளியாம்!

‘செக்கச் சிவந்த வானம்‘ படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்திருப்பவர் கன்னட தேசத்து கனவுக் கன்னி டயானா எரப்பா.

இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது பற்றி நடிகை டயானா கூறுகையில்,

‘‘கர்நாடக மாநிலம் கூர்க்தான் என்னோட சொந்த ஊர். 2011இல் மிஸ் இந்தியா போட்டியில் பங்கெடுத்த போட்டியாளர்களில் டாப்-10இல் நானும் இருந்தேன்.

அப்போதான் என்னுடைய போட்டோக்களை மணிரத்னம் சார் பார்த்திருக்கிறார். முதல் படமே தமிழ் படமா இருக்கும்னு நினைச்சும் பார்க்கல. அதுவும் மணிரத்னம் சார் படம்.திடீர்னு ஒரு நாள் மெட்ராஸ் டாக்கீஸ் ஆபீஸ்லேருந்து போன் வந்தது. யாரோ தமாஷ் பண்றாங்கன்னு தான் நினைச்சேன். திடீர்னு ஒரு நாள் வந்து ஆடிஷன் வச்சிட்டாங்க. பிறகு மணிரத்னம் சாரை பார்க்கணும்னு சொன்னதும் வானத்துல பறக்க ஆரம்பிச்சேன். அவரை சந்தித்து டயலாக் பேசி நடித்து காண்பித்தேன். அப்படியாகத்தான் முதல் பட வாய்ப்பு கிடைத்தது.

சினிமால வரணும்னுதான் ரொம்ப நாளா எனக்குள் ஆசை இருந்தது. முதல் படமே இவ்வளவு பெரிய படமா அமையும்னு நான் நினைச்சும் பார்க்கல. மேலும், எந்த மொழி படமாக இருந்தாலும் இனிமேல் நடிப்பேன்’’ என்கிறார் கன்னட தேசத்துப் பைங்கிளி டயானா.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading