LocalNorth

நினைவேந்தல் தடை கோரும் மனுவுக்கு எதிராக மன்றில் ஆஜராவார் சுமந்திரன்!

யாழ். நல்லூரியில் தியாக தீபம் திலீபனின் தூபிப் பகுதியில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி பொலிஸார் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் அதற்கு முதல் நாள் – அதாவது நாளைமறுதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ.சுமந்திரன் எம்.பி.நீதிமன்றில் பிரசன்னமாகி, பொலிஸ் விண்ணப்பத்துக்கு எதிராக வாதிடுவார் எனத் தெரியவருகின்றது.

ஏற்கனவே வேறு ஒரு வழக்குக்காக அன்றைய தினம் யாழ். நீதிமன்றத்தில் பிரசன்னமாக வேண்டிய தேவை அவருக்கு இருப்பதால், இந்த வழக்கையும் சேர்த்து அவர் கவனித்துக்கொள்வார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading