Local

வடக்கு – கிழக்கு வீடமைப்பு விவகாரம்: இன்று புதிய அமைச்சரவைப் பத்திரம்!

வடக்கு – கிழக்கில் 25ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான குழுவின் மேற்பார்வையில் இந்தப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று தெரியவருகின்றது.

வடக்கு – கிழக்கில் 25ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி எந்த அமைச்சின் ஊடாக முன்னெடுப்பது என்பதில் இழுபறி நிலவி வந்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான சுவாமிநாதன், மனோ கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சந்திப்பு இடம்பெற்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினால் வீட்டுத் திட்டம் மேற்பார்வை செய்யப்படும் என்றும், ஜனாதிபதி விசேட செயலணியின் செயலர் வே.சிவஞானசோதி இந்தத் திட்டத்தை முன்னெடுப்பவராக இருப்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த முடிவைச் செயற்படுத்துவதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் பிரதமரின் அமைச்சினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்படி அமைச்சரவை தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரியவருகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading