Local

விக்கிக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 வரை ஒத்திவைப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி அறிவிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவிருந்த நிலையில், இதுவரை தீர்ப்பு எழுதப்படாத காரணத்தால், அதனை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர் பதவியை பா. டெனீஸ்வரனுக்கு வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் சி வி விக்கினேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்ததாக வழக்குத் தாக்கல் செய்யப்ப்டடது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலும், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading