Local

ஹக்கீம், ரிஷாத்தின் முடிவில் மாற்றமில்லை! – ரணிலுக்கே ஆதரவு என்று ஐ.தே.க. தெரிவிப்பு

ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவைத் தெரிவிப்பதற்குத் தீர்மானித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் மு.காவின் தலைவர் ரவூம் ஹக்கீம், அ.இ.ம.காவின் தலைவர் ரிஷாத் பதியூதீன் ஆகியோர் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விடயம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவது தொடர்பான நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாக இருக்கின்றது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading