Local

அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம்!

பெற்றோல் வாகன உரிமையாளர்களை அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய CPC பெற்றோல் கையிருப்பு மிகவும் குறைவாக உள்ளதாகவும், அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

லங்கா ஐஓசி சில பெற்றோல் கொள்ளளவுககளை வைத்திருப்பதாகவும், மேலும் பெட்ரோலை சந்தைக்கு வெளியிடுமாறு லங்கா ஐஓசியிடம் அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

23ஆம் திகதிக்கு பின்னர் பெற்றோல் விநியோகம் வழமைக்கு வரலாம் எனவும், அதற்குள் ஒரு பெற்றோல் கப்பல் வருமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

CPC யிடம் போதுமான அளவு டீசல் கையிருப்பு இருப்பதாகவும், தற்போது விநியோகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading