Gossip

திருமணத்திற்கு வர மறந்த MLA மாப்பிள்ளைக்கு எதிராக காதலி வழக்குப் பதிவு!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் தன் சொந்த திருமணத்திற்கு செல்ல மறந்த MLA மீது வழக்கு பாய்ந்தது.

ஒடிசா மாநிலம் டிர்டோல் தொகுதியின் MLA பிஜேய் சங்கர் தாஸ். இவரும் பெண்ணொருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை பதிவு திருமணம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினம் உரிய நேரத்திற்கு மணமகனான MLA பிஜெய் வரவில்லை. குறித்த பெண் அவரை பல முறை செல்போனில் தொடர்பு கொண்டபோதும், அவர் பதிலளிக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அப்பெண் பொலிஸில் புகார் தெரிவித்திருந்தார். அதில், தன்னை திருமணம் செய்துகொள்ள வாக்குறுதி அளித்துவிட்டு பிஜேய் வரவில்லை என்றும், அதுகுறித்து கேட்டபோது அவரது உறவினர்கள் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் பிஜெய் சங்கர் இதுகுறித்து கூறும்போது, கடந்த மே மாதம் திருமணம் செய்துகொள்ள பதிவு செய்திருந்தோம். திருமணத்திற்கு இன்னும் 60 நாட்கள் இருப்பதாக நினைத்தேன்.எனக்கு யாரும் அதனை நினைவுபடுத்தாத காரணத்தினால் திருமணத்திற்கு செல்ல மறந்துவிட்டேன். நான் திருமணத்தை நிறுத்த முயற்சி செய்யவில்லை என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading