World

அண்ணன் முறையில் பழகிய நெருங்கிய உறவால் தங்கை கர்ப்பம்

இந்திய மாநிலமான தமிழகத்தில் கன்னியாகுமரியில் 17 வயது சிறுமியை அண்ணன் முறையில் இருக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று வலி காரணமாக 12ம் வகுப்பு படிக்கும் சிறுமியை மருத்துவகல்லூரி மருத்துவமனை ஒன்றில் பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்ததால் மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தநிலையில், சிறுமியையும், அவரது தாயையும் விசாரணை மேற்கொண்ட பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது.

விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் பரசேரியை அடுத்த மணக்கரை கிராமத்தை சேர்ந்த சிறுமி, அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் அண்ணன் முறையான 19 வயதான வாலிபருடன் பழகி வந்துள்ளார்.

நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை கல்லூரியில் வரலாறு பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் சஞ்ஜீவ் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனால் பெற்றோருக்கு தெரியாமல் சிறுமி குறித்த இளைஞருடன் நெருங்கிப் பழகியுள்ளார். நாளடைவில் பெற்றோருக்கு தெரியவரவே இருவரையும் கண்டித்துள்ளனர்.

ஆனாலும் பெற்றோருக்கு தெரியாமல் தனிமையில் பழகி வந்த நிலையில், சிறுமி கர்ப்பமாக இருக்கும் விடயம் பெற்றோருக்கு தெரியவர கருக்கலைப்பு செய்ய மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.

குறித்த தனியார் மருத்துவமனை மருத்துவர், மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை அனுப்பியுள்ளது பொலிசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தற்போது சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான இளைஞர் சஞ்சீவை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கர்ப்பமடைந்த மாணவி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading