Local

நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைகின்றமைக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும்

மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைகின்றமைக்கு மத்திய வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நிதி நிறுவனங்கள் தொடர்பில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் கீழ் உள்ள நிதி நிறுவனங்கள் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைகின்றமை மற்றும் அங்கு இடம்பெறுகின்ற முறைகேடுகள் குறித்து அரசாங்கம் அதிருப்தி அடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலைமைகளினால் அரச நிதி நிறுவனங்கள் தொடர்பில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை சீர்குலைவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய,  புதிதாக சட்டங்களை வகுத்து அல்லது  நடவடிக்கைகளை எடுத்து இவ்வாறான நிலைமைகளை தடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading