அனைத்து கப்பலையும் 20 நிமிடங்களில் அழிக்கும் திறன் சீனாவிடம் உள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு!!
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth), சீனாவின் ஏவுகணை வலிமை குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
“சீனாவுடனான போர் மூண்டால், வெறும் 20 நிமிடங்களில் அமெரிக்காவின் அனைத்து விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களையும் அழிக்கும் வல்லமை சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுக்கு உண்டு” என அவர் எச்சரித்துள்ளார்.
பீட் ஹெக்செத் இந்தப் பாதுகாப்புத் துறை தொடர்பான எச்சரிக்கையை, அவர் பாதுகாப்புச் செயலாளராகப் பதவியேற்பதற்கு சற்று முன்னர் ‘Shawn Ryan Show’ என்ற புகழ்பெற்ற podcast நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஆழமாக விவரித்திருந்தார்.
பென்டகன் நடத்திய பல்வேறு போர்ப் பயிற்சிகளில் அமெரிக்கா தொடர்ந்து தோல்வியடைந்து வருவதையும், சீனாவின் ‘கேரியர் கில்லர்’ ஏவுகணைகளுக்கு முன்னால் அமெரிக்காவின் தற்காப்பு பலவீனமாக உள்ளதையும் அவர் அங்கு சுட்டிக்காட்டினார்.
தற்போது அவர் பாதுகாப்புத் துறையின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால், இந்த பழைய மதிப்பீடுகள் இப்போது அதிக முக்கியத்துவம் பெற்று செய்திகளில் வைரலாகி வருகின்றன.

You must be logged in to post a comment.