Local

அப்பாவி மக்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை அரசு சுரண்டி எடுத்துவிட்டது!

பால்மா, உணவுப் பொருட்களுக்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தை, மதுபான விற்பனை நிலையங்களைத் திறந்து அரசு சுரண்டி எடுத்துள்ளது” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் (Kabir Hashim) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரசுக்கு வருமானம் இல்லாத காரணத்தால் கலால் வரியைப் பெற்றுக் கொள்வதற்காகவே மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இதனூடாக வீடுகளில் உள்ள தாய்மார் பால்மா, உணவுப் பொருட்களை வாங்குவதற்காகச் சேமித்து வைத்திருந்த பணத்தை அரசு தமது வருமானத்துக்காக சுரண்டி எடுத்துள்ளது.

பால்மா, அரிசிக்குத் தட்டுப்பாடுகள் நிலவும் நிலையில் பால்மா விலையை அதிகரித்தனர்.

மதுபான சாலைகள் திறக்கப்பட்டதால் ஆண்கள் வீடுகளில் உள்ள தாய்மார் சேமித்து வைத்திருந்த பணத்தைப் பறித்தெடுத்து வந்து அரசுக்குக் கொடுத்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading