World

18 இலட்சம் ரூபாவுக்கு ஏலம் போன அதிசய லட்டு!

இந்தியாவில் சுமார் 21 கிலோ எடை கொண்ட லட்டு 18.9 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அதிசய நிகழ்வு நடந்துள்ளது.

ஹைதராபாத்தை அடுத்த பாலாபூரிலுள்ள விநாயகர் ஆலயத்தில் செய்யப்பட்ட லட்டு ஒன்றே இப்படி ஏலம் போயுள்ளது.

இந்த லட்டை சாப்பிட்டால் பக்தர்கள் வளமாக வாழலாம் என்ற நம்பிக்கை உள்ளது, கடந்தாண்டு ஏலம் நடைபெறாத நிலையில் இந்த ஆண்டு ஏலம் விடப்பட்டது.

தொடக்க விலையாக 1,116 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, சுமார் 18.9 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.

ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.சி ரமேஷ் யாதவ் மற்றும் அவரின் ஆதரவாளர் மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் இந்த ஏலத்தை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading