World

அமெரிக்காவின் B-2 தாக்குதலுக்கான இழப்பீடு: ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

ஈரானில் (Iran) தாக்கப்பட்ட அனுசக்தி நிலையங்களுக்கு அமெரிக்கா (United States) இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளாதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இல்லை என்றால் இது தொடர்பில் ஐ.நாவில் (United Nations) புகாரளிக்கப்படும் என்று ஈரான் தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தற்போது முடிவடைந்துள்ளது.

இருப்பினும், இந்த போர் தொடரும் போது அமெரிக்கா திடீரென ஈரானின் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து மாபெரும் தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவின் B-2 தாக்குதலுக்கான இழப்பீடு: ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை | America Is Preparing For Talks With Iran

கடந்த ஜூன் 22 ஆம் திகதி அதிகாலையில், அமெரிக்கா B-2 “ஸ்பிரிட்” போர் விமானங்களை பயன்படுத்தி, ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்பஹான் ஆகிய மூன்று முக்கிய அணுசக்தி மையங்களை குறிவைத்து தாக்கியது.

இதில் GBU-57 “பங்கர் பஸ்டர்” எனப்படும், தரைக்கடியில் உள்ள கட்டமைப்புகளை அழிக்க உருவாக்கப்பட்ட மாபெரும் குண்டுகள் 14 வீசப்பட்டன.

கூடுதலாக, 30 Tomahawk ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், ஈரான் இப்போது அதிகாரப்பூர்வமாக “மூன்று அணுசக்தி நிலையங்களும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன” என உறுதிப்படுத்தியுள்ளது.

இது அவர்களின் யுரேனியம் செறிவூட்டும் திட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் B-2 தாக்குதலுக்கான இழப்பீடு: ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை | America Is Preparing For Talks With Iran

தற்காலிகமாக 400 கிலோ செறிவூட்டப்பட்ட யுரேனியம் பாதுகாக்கப்பட்டிருப்பதால், ஈரானுக்கு பத்து அணுகுண்டுகள் தயாரிக்கும் திறன் இன்னும் உள்ளது என்பது கவலையை ஏற்படுத்துகிறது.

இது தொடர்பில் ஈரான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ள கருத்தின் படி, “இந்த சேதத்திற்கு அமெரிக்கா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இல்லையெனில் ஐக்கிய நாடுகள் சபையில் அதிகாரபூர்வ புகார் அளிக்கப்படும்.” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading