World

அமெரிக்கா பிடிவாதத்தை கைவிட வேண்டும் ஈரான் நிபந்தனை!!

 

இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையின் வெற்றி, அமெரிக்கா தனது நியாயமற்ற கோரிக்கைகளை மாற்றிக்கொள்வதிலேயே தங்கியுள்ளதாக ஈரானின் Fars செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை விவகாரம் உட்பட பல முக்கியமான விடயங்களில் இன்னும் தீர்வு எட்டப்பட வேண்டியுள்ளதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

​தற்போது இரு நாட்டுத் தூதுக்குழுவினரும் தத்தமது நிபுணர் குழுக்களுடன் ஆலோசனைகளை மேற்கொள்வதற்காகப் பேச்சுவார்த்தையிலிருந்து தற்காலிகமாக இடைவேளை எடுத்துள்ளனர். பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் இரு தரப்புக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து, பொதுவான உடன்பாட்டை எட்ட தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும், வரைவு அறிக்கைகள் தயாரானதும் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading