World

ஈரானுக்கு பாதுகாப்பு வழங்க தயாராகும் சீனா!!

 

ஈரான் இன்னும் ஆயிரக்கணக்கான பலிஸ்டிக் ஏவுகணைகளை வைத்திருக்கிறது, சீனா ஈரானுக்கு MANPAD வான் பாதுகாப்பு ஆயுதங்கள் வழங்க தயாராகிறது!

-அமெரிக்க புலனாய்வு துறை தகவல்!

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்கள் ஐந்து வாரங்களாக (13,000க்கும் மேற்பட்ட இலக்குகள்) நடைபெற்ற பின்னரும் ஈரான் தனது ஏவுகணை திறனை பெருமளவு தக்கவைத்திருப்பதாக அமெரிக்க புலனாய்வுத் துறை (US Intelligence) மதிப்பீடு செய்துள்ளது.

மேலும், சீனா ஈரானுக்கு புதிய வான் பாதுகாப்பு ஆயுதங்களை (MANPADs) அனுப்ப தயாராகி வருவதாகவும் அதே உளவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க உளவுத்துறை மதிப்பீட்டின்படி, ஈரானிடம் இன்னும் 1,000க்கும் மேற்பட்ட Medium-range பலிஸ்டிக் ஏவுகணைகள் சேதமடையாமல் (intact) உள்ளன.

ஈரானின் மொத்த ஏவுகணை லோஞ்சரில் சுமார் பாதி (roughly half) இன்னும் செயல்பாட்டில் இருப்பதாகவும், பல நிலத்தடி பதுங்கு குளிகள் (underground bunkers) பாதுகாக்கப்பட்டுள்ள ஏவுகணை லான்ச்சர்களை விரைவில் மீட்டெடுத்து பயன்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான one-way attack drones-ம் இன்னும் ஈரானின் கையில் உள்ளன.

இந்த தகவல்கள் CNN, Times of Israel, Jerusalem Post உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அமெரிக்க அதிகாரிகள் “missile program-ஐ அழித்துவிட்டோம்” என்று கூறினாலும், உளவு அறிக்கைகள் அது முழுமையாக இல்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

இதேவேளையில், சீனா அடுத்த சில வாரங்களில் ஈரானுக்கு Shoulder-fired MANPADs (man-portable air defense systems) என்ற வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வழங்க தயாரிப்பு செய்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும்.

சீனா இவற்றை third countries (மூன்றாவது நாடுகள்) வழியாக அனுப்பி மறைக்க முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.

இருந்தபோதிலும் சீனா இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading