World

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்கப்படலாம்… ஈரான் அறிவிப்பு!!

 

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் புதிய இராணுவ எச்சரிக்கைகளை விடுத்துள்ளதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. மொஜ்தபா கமேனியின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் வெளியிடப்பட்ட செய்தியில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதைத் தொடர்ந்து, ஈரானியக் கப்பல்களை அமெரிக்கா தடுத்து வரும் சூழலில், எதிரிகளுக்குப் புதிய தோல்விகளைப் பரிசளிக்க ஈரானியக் கடற்படை தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்டை நாடுகளான வளைகுடா நாடுகளுக்கும் பாரிய விளைவுகள் ஏற்படும் என ஈரான் எச்சரித்துள்ள நிலையில், இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டிருந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளும் பிரதிநிதிகள் வருகை தராததால் ஆரம்பமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading