World

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் 100க்கும் மேற்பட்ட ஜனநாயக கட்சி பெண்கள் வெற்றி

US midterms election Democrats women break Records: 2026 ம் ஆண்டு அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெண்கள் வேட்பாளர்கள் 100க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்காவின் 2026 ம் ஆண்டு இடைக்கால தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள தேர்தல் முடிவுகளின் படி, பிரதிநிதிகள் சபையில்(House of Representatives) ஜனநாயக கட்சியின் பெண் வேட்பாளர்கள் முதல் முறையாக குறைந்தது 102 ந்தத இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளனர்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பெண்கள் சாதனை: 100க்கும் மேற்பட்ட ஜனநாயக கட்சி பெண்கள் வெற்றி | Us Midterms Election Democrats Women Break Records

இதன் மூலம் கடந்த 2018 ம் ஆண்டு தேர்தலில் ஜனநாயக கட்சி வென்றிருந்த 95 இடங்கள் என்ற எண்ணிக்கையை தற்போது அதே கட்சி முறியடித்து சாதனை படைத்துள்ளது.

அதே நேரத்தில் குடியரசு கட்சியானது வெறும் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மேலும் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

தேர்தல் முடிவுகள் இறுதியாக உறுதி செய்யப்படும் போது குடியரசு கட்சியின் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30-ல் இருந்து 20-ஆக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் அதிகப்படியான பெண்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரதிநிதிகள் சபையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் 30% தொட்டுள்ளது.

இது வரலாற்று சாதனையாக பார்க்கப்பட்டாலும் அமெரிக்க மக்கள் தொகையில் பெண்களின் பங்களிப்பான 51% உடன் ஒப்பிடுகையில் தற்போதைய சதவீதம் குறைவாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் பெண்கள் சாதனை: 100க்கும் மேற்பட்ட ஜனநாயக கட்சி பெண்கள் வெற்றி | Us Midterms Election Democrats Women Break Records

மேலும், பல்வேறு மாகாணங்களின் ஆளுநர் தேர்தலிலும் பெண்கள் அதிக அளவு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கிட்டத்தட்ட 15 மாகாணங்களில் பெண்கள் ஆளுநர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading