World

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயரான தமிழ் பெண்…!!!

tamil origin nithya raman won as los angeles mayor: லாஸ் ஏஞ்செல்ஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் பெண்ணான நித்யா ராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய நகரமான லாஸ் ஏஞ்செல்ஸின் மேயர் தேர்தலில் தற்போதைய மேயர் கரேன் பாஸுக்கும், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த தமிழ் பெண்ணான நித்யா ராமனுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் நித்யா ராமன் | Tamil Origin Nithya Raman Won As Los Angeles Mayor

முதலில் கரேன் பாஸ் முன்னிலை பெற்றிருந்தாலும், இறுதியில் நித்யா ராமன் 4,60,772 வாக்குகள் (52.7%) பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கரேன் பாஸ் 413,519 வாக்குகளுடன் (47.3%) 2வது இடத்தில் உள்ளார்.

இந்த வெற்றி மூலம், லாஸ் ஏஞ்சல்ஸின் மேயரராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை நித்யா ராமன் பெற்றுள்ளார்.

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் நித்யா ராமன் | Tamil Origin Nithya Raman Won As Los Angeles Mayor

கடந்த 20 ஆண்டுகளில் மறுதேர்தலில் தோல்வியடைந்த முதல் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் என்ற பெருமையை கரேன் பாஸ் பெறுகிறார்.

45 வயதான நித்யா ராமன், கேரளாவில் உள்ள தமிழ் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார்.

லாஸ் ஏஞ்செல்ஸ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் பெண் நித்யா ராமன் | Tamil Origin Nithya Raman Won As Los Angeles Mayor

தனது 6 வயதிலே பெற்றோருடன் அமெரிக்காவின் லூசியானாவிற்கு குடிபெயர்ந்த அவர், அங்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாட்டில் இளங்கலைப் பட்டத்தையும், பின்னர் எம்ஐடியில் நகர்ப்புற திட்டமிடலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

அதன் பின்னர் இந்தியாவிற்குத் திரும்பி, நகரில் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் Transparent Chennai என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்.

பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்று, வீடற்றவர்களுக்கு வீடுகளை கட்டி தரும் SELAH என்ற லாபநோக்கற்ற அமைப்பை நிறுவினார். 2020 மற்றும் 2024 லாஸ் ஏஞ்செல்ஸ் நகரமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நகர்மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

லாஸ் ஏஞ்செல்ஸ் நகர திட்டமிடலில் முக்கிய பங்கு வகித்த நித்யா ராமன், தனது பதவி காலத்தில், வீடற்றவர்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பது போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டார்.

கடந்த ஜூனில் நடைபெற்ற முதல்கட்ட மேயர் தேர்தலில், 3வது இடத்தில் இருந்த இந்திய வம்சாவளியான நித்யா ராமன், ரியாலிட்டி டிவி நட்சத்திரமான ஸ்பென்சர் பிராட்டை முந்தி, இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading