Local

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுவது பாரிய வீழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.

மத்திய வங்கி இன்று (08) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றில் விற்பனைப் பெறுமதி, 200.46 ரூபாவாகவும், கொள்வனவுப் பெறுமதி 193.95 ரூபாவாகவும் வரையறுக்கப்பட்டிருந்தது.

இது நேற்று முன்தினம் இருந்த விற்பனைப் பெறுமதியை விட,  1.06 ரூபா அதிகமாகும். இலங்கை வரலாற்றில் அமெரிக்க டொலர் 199  ரூபாவுக்கு விற்கப்பட்ட முதல் சம்பவம் கடந்த 6 ஆம் திகதி பதிவானது. இந்நிலையிலேயே 200 ரூபாவை தாண்டியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading