World

அமெரிக்க தளங்களை நோக்கி ஈரான் ஐ.ஆர்.ஜி.சி. தாக்குதல்…!!!

பஹ்ரைனை நோக்கி ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி.யால் ஏவப்பட்ட பல ஒருவழித் தாக்குதல் ட்ரோன்கள் அனைத்தும் இடைமறிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனால் அமெரிக்க உபகரணங்களுக்கோ அல்லது பணியாளர்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.

பஹ்ரைனின் ஷேக் ஈசா விமானப்படைத் தளத்தில் உள்ள அமெரிக்க ரேடார் அமைப்பைத் தாக்கியதாகப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது .

முன்னதாக, தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் வந்துகொண்டிருந்த ட்ரோன் தாக்குதல் சுட்டு வீழ்த்தியதாக பஹ்ரைன் தெரிவித்திருந்தது.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி ஐ.ஆர்.ஜி.சி. தாக்குதல் | Irgc Attack Targeting Us Bases In Bahrain

இதன்படி பெப்ரவரி 28 அன்று தொடங்கி, முழு வளைகுடா பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளைப் பாதித்துள்ள, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ராஜதந்திர முயற்சிகள் முடங்கியுள்ள நிலையில், அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் மீதான இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading