Local

அரசியல் நாடகம் 21 ஆம் திகதி ஆரம்பம் ஜனாதிபதியை சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அரசியல் பிரச்சினை உட்பட மேலும் சில விடயங்களை தொடர்பில் இதன்போது கலந்துரையாட எதிர்ப்பார்த்திருப்பதாகவும், அச்சந்திப்பின் பின்னர் முன்னோக்கி பயணிப்பதற்கான சூழ்நிலை உருவாகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கும், மொட்டு கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அரசியிலிருந்து வெளியேறுமாறும் அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்தில் இச்சந்திப்பு இடம்பெறுவது முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.

மேற்படி சந்திப்பின் பின்னரே சுதந்திரக்கட்சியினரின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் தீர்மானிக்கப்படவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading