Cinema

வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் இடயே பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.

விஸ்வாசம் திரைப்படத்திற்கு பிறகு, அஜித் நடிப்பில் போனி கப்பூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது. பிங்க் எனும் இந்தி திரைப்படத்தின் ரீமேக்கான இத்திரைப்படம், அஜித்தின் வழக்கமான கமர்ஷியல் பானியில் இருந்து விலகி, அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் வித்தியாசமான திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படம் பெரும் ஹிட் அடித்த நிலையில், அந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் அடுத்த திரைப்படத்திற்கு கைகோர்த்தது. அஜித்தின் 60வது திரைப்படமான இப்படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளதாக அக்டோபர் 18, 2019 அன்று அறிவிப்பு வெளியானது. அதுதான், இத்திரைப்படம் குறித்து படக்குழுவினர் அஜித் ரசிகர்களுக்கு கொடுத்த கடைசி அப்டேட். அதன் பின்னர், கிட்டதட்ட 632 நாட்களாக படத்தின் அப்டேட் கிடைக்காமல் அஜித் ரசிகர்கள் தவித்து வந்தனர்.

கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல, அஜித் ரசிகர்கள் செல்லுமிடமெல்லாம் அப்டேட் கேட்டுக்கொண்டிருந்தனர் என்பதே உண்மை. உள்ளூர் முதல் வெளியூர் வரை, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருது ஆன்லைன் போஸ்டுக்கு கீழும் வலிமை அப்டேட் கேட்டு ஒரு அஜித் ரசிகரின் போஸ்ட் கண்டிபாக இருக்கும். இவ்வளவு ஏன், பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனிடம் ட்விட்டரில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு, நான் வெற்றி பெற்ற உடன் வலிமை அப்டேட் கிடைக்கும் தம்பி என அவர் பதிலளித்த நிகழ்வெல்லாம் நடந்தது. யூரோ கால்பந்து ஆட்டத்தில் கூட வலிமை அப்டேட் கோரி ரசிகர்கள் பதாகை ஏந்தியது, இணையத்தில் வைரலானது. கண்டா வர சொல்லுங்க என அப்டேட்டை தேடித்திரிந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இன்று ஜுலை 11 வலிமையின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியானது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது என்றே கூற வேண்டும்.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் பைக் ரேசராக காட்சியளிக்கிறார். 5 புகைப்படங்களுக்கு மேல் இடம் பெரும் இந்த போஸ்டரில் POWER IS A STATE OF MIND என்ற வாக்கியங்களுக்கு நடுவே பவரான பார்வையோடு நம்மை கவர்கிறார் அஜித். ரவுடிகளுக்கு நடுவே மாஸ்-ஆக ஒன்று, பைக் ஹெல்மட்டுடன் ஒன்று, கண்ணாடியுடன் ஸ்டலாக ஒன்று, என பல்வேறு வகையாக ரசிகர்களை கவரும் வகையில் இந்த மோஷன் போஸ்டர் அமைந்துள்ளது.

இந்த பர்ஸ்ட் லுக் மற்றூம் மோஷன் போஸ்டர் அப்டேட் கிடைத்த சந்தோஷத்தில், அஜித்தை அவரது ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading