Local

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நாளை (18) ஆய்வு செய்ய தீர்மானம்

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நாளை (18) ஆய்வு செய்யப்படும் என்று கோவிட் -19 நோயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயலணிக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
சுகாதாரப் பாதுகாப்பு முறையைப் பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறுவனங்களை ஆய்வு செய்ய வருபவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண கேட்டுள்ளார்.
இதேவேளை, மீளத் திறக்கப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading